Home தமிழகச் செய்திகள் பா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி!

பா.ஜ.க முன்னணியில் – மீண்டும் பிரதமராகிறார் மோடி!

182
0

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜ.க 322 இடங்களில் முன்னிலையில் உள்ளமையால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியே தேர்வாகிறார்.

பிந்திய நிலவரப்படி 322 இடங்களில் பாஜக முன்னிலையில் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 111 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பாஜக முன்னிலை பெற்றாலும் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.