Home செய்திகள் கல்வி நடவடிக்கைகளுக்கு யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணக்கம்:

கல்வி நடவடிக்கைகளுக்கு யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணக்கம்:

212
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

யாழ்-பல்கலைக்கழக துணை வேந்தர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்கள் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.