Home செய்திகள் கிளிநொச்சியில் – ஊர்வலம் நடாத்திய இராணூவம்!

கிளிநொச்சியில் – ஊர்வலம் நடாத்திய இராணூவம்!

157
0

தமிழர் தாயகத்தை அழித்து மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போரின் வெற்றியை கொண்டாடும் முகமாக “சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் ஒன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் பங்குபற்றிய இந்த ஊர்வலம் ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது.

பத்தாண்டுகள் கழிந்த நிலையிலும் மக்களின் மீள் குடியேற்றம் இன்னமும் முழுமையாக இடம்பெறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை என்ன என தெரியவில்லை. இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் மிக்க இடமாக வடமாகாணம் இன்றும் திகழ்கிறது. முடக்கப்பட்டு, அடக்கப்பட்ட இனமாக தமிழினம் இன்று கடந்தகால கனவுகளோடு வலிகளை சுமந்தவர்களாக வாழ்ந்துவரும் நிலையில் அதே பகுதியில் தமது வெற்றிக்கொண்டாட்டங்களை இராணுவத்தினர் நடாத்தி தமிழர் மனங்களை மேலும் புண்ணாக்கியுள்ளனர்.