Home தாயக செய்திகள் ஓமந்தைப் பகுதியில் வீசிய சூறைக் காற்றினால் வீடுகள், மரங்கள் சேதம்:

ஓமந்தைப் பகுதியில் வீசிய சூறைக் காற்றினால் வீடுகள், மரங்கள் சேதம்:

204
0

வவுனியா- ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்தில் வீசிய சூறைக் காற்றினால், ஆலயம் மற்றும் வீடுகள் சேதமடைந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தபோது, திடீரென வீசிய காற்றால், வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, பயன்தரு மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.

ஆதி விநாயகர் ஆலயத்தின் கூரையும் தூக்கி வீசப்பட்டது. இந்த இடரில் சிக்கி இருவர் காயமடைந்தனர்.