
தற்கொலைத் தாக்குதலின் சூரிரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான மொஹமட் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைத்தாரியான சஹ்ரானின் மகள், சகோதரி ஆகியோரின் மரபணுக்களின் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் அடிப்படையில், இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தான் இந்த மொஹமட் சஹ்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.