Home தாயக செய்திகள் வற்றாப்பளையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!

வற்றாப்பளையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!

191
0

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

வல்வெட்டித்துறையில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு பொங்கல் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினரால் வழிமறிக்கப்பட்டபோது, பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே வாய்த் தர்க்கம் ஏறபட்டுள்ளது.

பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது குண்டு மீட்கப்பட்டதாக தெரிவித்து காவல்துறையினரால் வாகனத்தில் பயணித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இதை மறுக்கும் கைதான குடும்பத்தின்அர் ஐவரும் காவல்துறையினருடன் தர்க்கப்பட்டற்காக தம்மை பளிவாங்கும் நோக்குடன் காவல்துறையினரே தமது வாகனத்தில் குண்டை வைத்து விட்டு பொய் குற்றச்சாட்டின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.