Home செய்திகள் வடக்கில் அனைத்து ஆயலங்களிலும் ஒரே நேரத்தில் அஞ்சலி!

வடக்கில் அனைத்து ஆயலங்களிலும் ஒரே நேரத்தில் அஞ்சலி!

190
0

மட்டக்களப்பு ,நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத நினைவு நாளை முன்னிட்டு, வடமாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மிருசுவில் புனித நீக்கிலஸ் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டில் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

ஆளுநரரின் வேண்டுகோளிற்கிணங்க வடமாகாணத்தில் உள்ள சைவ ஆலயங்கள், மற்றும் கிறீஸ்த்தவ தேவாலயங்களில் இன்று காலை 8:45 மணிக்கு மணி ஓசை எளுப்பப்பட்டதோடு, சிறப்பு வழுபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.