Home உலக செய்திகள் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

420
0

பிரித்தானியாவின் – ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திலும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வளாகத்தின் ஆற்றங்கரை ஓரமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அருகே நேற்று (18/05/2019) மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதான சுடரினை கவிக்குயில் அவர்கள் ஏற்றிவைக்க மக்கள் அனைவரும் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாவீரர் மண்டபத்தில் நினைவுரைகள், கவிதை எழுச்சிப் பாடல்கள் என்பன நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையின் உச்சமாக 2009 ஆம் ஆண்டு முளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட துயர நாளின் 10ம் ஆண்டு நினைவு நாளான நேற்றைய தினம் உலகெங்கும் நினைவு நிகழ்வுகளும், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.