
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மூன்றாவது தடைவையும் அதிக வாக்குகளுடன் பிரதமராக மீண்டும் வி.ருத்திரகுமஅரன் தெரிவாகியுள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre வரலாற்றுக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணை பாராளுமன்ற முதல் அமர்வின் போது பிரதமருக்காக இருவரது பெயர்கள், மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட நிலையில் பெரும்பான்மை வாக்குகளால் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமராக தெரிவான பின் தனது ஏற்புரையை நிகழ்த்திய வி.ருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிடுகையில், போராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. நாம் அனைவரும் விடுதலைக்கான களத்தில் போராளிகளே என தெரிவித்தார்.