Home உலக செய்திகள் பிரித்தானியா – முள்ளிவாய்க்கால் நினைவு பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள்!

பிரித்தானியா – முள்ளிவாய்க்கால் நினைவு பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள்!

536
0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு மாபெரும் பேரணியை நடாத்தி வருகின்றனர்.

இன்று மதியம் 2:00 மணிக்கு கிறீன்பார்க் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் அங்கிருந்து 2:30 மணிக்கு தமது பேரணியை ஆரம்பித்தனர்.

இப் பேரணி இன்னும் சில மணித்தியாலங்களில் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தைச் சென்றடைந்து அங்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலின் கொடிய இன அழிப்பின் சாட்சிகளாக வெளிவந்த படங்களையும், வேற்றினத்தவரிடம் எமது வலிகளையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் எடுத்துக்காட்டும் முகமாக மொழியில் எழுதப்பட்ட பதாகைகளையும் தமிழர் தேசியக் கொடியினையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியான வளியில் தமது பேரணியை நடாத்திவருகின்றனர்.