
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையாக பதியப்பட்டுவிட்ட 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் கொல்லப்பட்ட ஒரு இடசத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் தமிழர் கட்சியும் அஞ்சலி நிகழ்வை நடாத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்த்இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதான சுடரினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஏற்றிவைத்தார்.
கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

