Home தாயக செய்திகள் தமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்!

தமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்!

268
0

நூறாயிரம் எம் சொந்தங்கள் அழிந்த ஒரு தசாப்த நிறைவின் கொடுந்துயர் நாளான “May 18” இன்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுதிரண்டு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இந்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதான சுடரினை இதே முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது தாயையும், உறவுகளையும் பறிகொடுத்து தனது ஒரு கையையும் இழந்து போரின் வடுக்களைச் சுமந்தவராகவும், கொடிய போரின் சாட்சியாகவும் இருக்கும் சிறுமி ராகினி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மதத் தலைவர்கள், அரசியல் அலைவர்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் தமது அஞ்சலிகளஇ வரிசையாக நின்று செலுத்தினர்.

தமிழினப்படுகொலையின் ஒரு தசாப்த கால பிரகடண உரையை கிழக்குமகாண இந்து மதகுரு ஐயா தமிழில் நிகழ்த, தொடர்ந்து அதே பிரகடண உரையினை ஆங்கிலத்தில் அருட்தந்தை லியோ ஆம்ஷ்ரோங்க் நிகழ்த்தினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி  விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் . 

இழந்த தமது உறவுகளை நினைந்து ஓ வென்று கதறி அழுத உறவுகளின் சத்ததால் ஒரு கணம் முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது. பின் மயாண அமைதியாகி கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை வெளீ நாட்டு ஊடக வியலாளர்களும் தமது புகைப்பட, மற்றும் ஒளிப்பட கருவிகளுக்குள் பதிவு செய்துகொண்டிருந்தனர்.