Home செய்திகள் 762 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை:

762 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை:

184
0

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (may 18) 762 கைதிகளை விடுவிக்க உள்ளதாக சிறீலங்காவின் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் நாளைய தின (18/05/2019) வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து விடுவிக்கப்படுவர் எனவும், சிறீலங்கா வரலாற்றில் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்படுவது இதுவே முதற்தடைவை எனவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நலீன் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் உள்ளவர்கள் தவிர ஏனைய கைதிகளில் இருந்து மேற்படி 762 பேரும் விடுதலைக்காக தெரிவி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசியல் கைதிகள் எவரேனும் விடுதலையாகின்றனரா என்பதை நாளை வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.