Home செய்திகள் யாழில் இரு இந்தியர்கள் காவல்துறையினரால் கைது!

யாழில் இரு இந்தியர்கள் காவல்துறையினரால் கைது!

154
0

சுற்றுலா வீசாவில் யாழில் தங்கியிருந்த இரு இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவிலில் இருந்து இலங்கைக்கு வந்த இரு இந்தியர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்தியபோது அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.