Home தாயக செய்திகள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பெண் போராளியின் உடல் எச்சம் மீட்பு!

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பெண் போராளியின் உடல் எச்சம் மீட்பு!

425
0

முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் கைகள் வலையால் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த பெண் போராளி ஒருவரின் உடல் எச்சம் மீட்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் இடுப்புப் பட்டியும், புலிகள் உறுப்பினர் இலக்க தகடு, மற்றும் சைனட் குப்பி என்பனவும் அவ் உடல் எச்சங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்று அப்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட போதே இன்று இம் மனித எச்சம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சிறீலங்கா படைகள் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளதோடு யாரும் அப்பிரதேசத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.