Home உலக செய்திகள் பிரித்தானியாவில் நாளை (May 18) மாபெரும் பேரணி!

பிரித்தானியாவில் நாளை (May 18) மாபெரும் பேரணி!

307
0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவில் நாளையதினம் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் தயாராகிவருகின்றனர்.

மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள கிறீன் பார்க் பகுதியில் நாளை (18/05/2019) சனிக்கிழமை மாலை 2:00 மணிக்கு ஆரம்பமாக உள்ள இப் பேரணி மாலை 4:00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையவுள்ளது.

அதந் பின் அங்கு முள்ளிவாய்க்காலில் இறந்த அனைத்து தமிழ் உறவுகளுக்குமாக அஞ்சலி நிகழ்வும் இடம்பெற உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பு போரை நிறுத்தக் கோரி பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே பாராளுமன்ற சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் 74 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையும், இரண்டு இலட்சத்திற்க்உம் அதிகமான மக்கள் கலந்து கொண்டு மாபெரும் பேரணி நடாத்தப்பட்டமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

அதே போல் நாளைய தினம் நடைபெறும் மாபெரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.