Home தாயக செய்திகள் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் முள்ளிவாய்க்காலில் உண்ணாவிரதம்!

தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் முள்ளிவாய்க்காலில் உண்ணாவிரதம்!

200
0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்காலில் நேற்று (16/05) அடையாள உண்ணாவிரதமும் அஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதோடு கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சுழற்சி முறையில் குறித்த பெற்றோர் உண்ணா நிலைப் போராட்டத்தை வவுனியாவிலும், முல்லைத்தீவிலும் மேற்கொண்டு வந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்ணிருந்தும் குருடர்களாக உலக நாடுகள் இருந்தமையால் ஈவிரக்கமற்றுறு இலங்கைப் படைகளால் எம் சொந்தங்கள் நூறாயிரத்திற்கும் அதிகமாக கொன்றழிக்கப்பட்ட கொடுந்துயர் இடம்பெற்ற நாட்கள் என்றும் தமிழர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாட்களாகவே இருக்கும்.