Home முக்கிய செய்திகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர தடையில்லை: இராணூவத் தளபதி

சட்ட விதிகளுக்கு உட்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர தடையில்லை: இராணூவத் தளபதி

174
0

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நினைவுகூர எந்த தடையும் இல்லை எனவும் அதாற்கு இராணுவம் இடையூறு செய்யாது எனவும் சிறீலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது;

இலங்­கை­யில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­வி­தி­க­ளுக்கு உட்­பட்டு, இறந்தவர்களை நினைவுகூரும் நினைவு தினத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்­கான உரிமை அனை­வ­ருக்­கும் காணப்­ப­டு­கி­றது. இலங்­கை­யில் அவ­ச­ர­கால சட்­டம் நடை­மு­றை­யில் உள்ள தரு­ணத்­தில், இவ்­வா­றான நினைவு தின நிகழ்­வு­களை நடத்­து­கின்­றமை சர்ச்­சைக்­கு­ரிய விட­யம் என்று பேசப்­ப­டு­கின்­றது. உண்­மை­யில் அவ­ச­ர­கால சட்­ட­மும், நினைவு தின கடைப்­பி­டிப்­பும் இரு வேறு விட­யங்­கள். நினைவு தினத்தை உரிய விதி­மு­றை­க­ளின் கீழ் அனைவரும் முன்­னெ­டுக்­க­லாம். இதற்கு இராணுவம் எந்த இடையூறும் செய்யாது – என்­றார்.