Home முக்கிய செய்திகள் யாழ்-பல்கலைக் கழகத்தில் கைதான மூவரும் பிணையில் இன்று விடுதலை!

யாழ்-பல்கலைக் கழகத்தில் கைதான மூவரும் பிணையில் இன்று விடுதலை!

178
0

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கடந்த 3ம் திகதி கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ் உயர் நீதி மன்றம் பிணையில் இன்று விடுவித்துள்ளது.

திடீர் சுற்றி வளைப்புத் தேடுதலின் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவ்ர் ஒன்றியத்தின் தலைவர். செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையுமே யாழ் உயர் நீதிமன்றம் இன்று தலா ஒரு இட்சம் ரூபா பிணையில் விடுவித்துள்ளது.

கடந்த 3ம் திகதி கைதான இவர்களை ப்யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இரு வாரகால விசாரணைக்கு உத்தரவிட்டு 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக இருவார காலம் முடிவடைந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்றைய விசாரணையின் போது சட்டமா அதிபரிடம் இருந்து தொலநகல் மூலம் எமக்கு கிடைத்த அறிவுறுத்தலின் படி மூவரையும் பிணையில் விடுவிக்க தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்த நிலையில் யாழ்-உயர் நீதிமன்றம் குறித்த மூவரையும் பிணையில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.