Home உலக செய்திகள் பிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!

பிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!

296
0

முள்ளிவாய்க்கால் பேரவலமாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட தமிழர்களின் துயர்தோய்ந்த தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலும் அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

நேற்று 15-05-2019 புதன்கிழமை மாலை வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் உள்ள Boothroyd Room, Portcullis House இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய தொழில்கட்சியின் தலைவர் ஜெறமி ஹோபன், தொழில் கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி, நிழல் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் லிஸ் மைகினஸ், நிழல் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் பிறீட் ஜில்,சிபோன் மைக்டோனா, ஜோன் றயன், விரேந்திர சர்மா உட்பட நிழல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்ற இந் நிகழ்வில் பெருந்திரளான தமிழர்களும், தமிழர் அல்லாத வேற்றினத்தவரும் கலந்துகொண்டமையால் மண்டபத்தின் இருக்கைகள் போதாமல் வெளியிலும் நின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்களின் ஏற்பாட்டில் தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்க்கட்டிச் தலைவரும், பிரித்தானியத் தொழில்கட்சியின் தலைவருமான ஜெறமி ஹோபன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.

இங்கு உரையாற்றிய தொழில்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எஇதிர்க்கட்சி நிழல் நிதி அமைச்சருமான ஜோன் மக்டொனால் தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட நீதிகளை சுட்டிக்காட்டியதோடு தமது கட்சியான தொழில்கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா அரசாங்கத்திற்கான ஆயுத விற்பனைகள் அனைத்தும் தடை செய்யப்படும் எனவும், அதே வேளை பிரித்தானியாவில் சிறீலங்கா படைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சிகளும் நிறுத்தப்பட்உம் எனவும் கூறினார்.