
பாடசாலை வாயிலில் ஆசிரியர் ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் வாளால் வெட்டியதனால் பாடசாலை வட்டாரத்தில் பதட்டம் நிலவுகிறது.
யாழ், அராலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பிள்ளைகளை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவருகின்றனர்.
வாள் வெட்டிறு இலக்கான ஆசிரியரின் சங்கிலையை அறுக்க முயன்ற போது அவர் அதிலிருந்து தப்பி பாடசாலைக்குள் நுளையும் போதே குறித்த இனந்தெரியாத நபர் ஆசிரியையை வாளால் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த மாதம் நாட்டையே உலுக்கிய குண்டுத்தாக்குதலின் பின்னர் முப்படைகளையும் கொண்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் வேளையில் பாடசாலை வாயிலில் பட்டப்பகலில் நடைபெற்ற இச் சம்பவம் அச்சத்தையும், பாதுகாப்பு இன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
பாடசாலைகளின் வாயிலிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டும், அவர்கள் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரும் அனுமத்க்கப்ப்அடும் வேளையில் இச் சம்பவம் எவ்வாறு நடந்தது ? வாள் வெட்டுக் குழுக்களூக்கு காவல்துறை மற்றும் இராணூவம் ஆதரவாக செயற்படுகிறதா..? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.