
தரம் 1 முதல் 5 வரையான பாடசாலைகள் இரண்டாத் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாடசாலைகளில் மாணவர் வருகை மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட இராணுவம், விசேட அதிரடிப்படை, காவல்துறையினர்,மற்றும் பாடசாலை சமூகத்தினரும் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், வாகனங்கள் என அவர்களின் உடைமைகள் என்பன தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், தொடர் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்க்அள் விடுக்கப்பட்டு வருவதால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு போக அஞ்சுவதுட்அன், பெற்றோரும் வெளியில் அனுப்ப தயங்கிவருகின்றனர்.
இந்றைய தினம் கிளீ நொச்சி, வவுனியா ஆகிய பாகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மிகக் குறைந்த எண்ணிகையான மாணவர்களே சமூகமளித்ததை காணமுடிந்தது.

