
தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் சிறிய ரக வான் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் நோக்கி சென்ற சிறிய ரக வான் ஒன்று புகையிரதக் கடவையை கடக்க முயன்றபோது கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித் தள்ளியுள்ளது.
புகையிரதம் வருவதைக் கண்டும் வாகனசாரதி கடவையை கடக்க முயன்றமையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று (11/05) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் வான் முற்றாக சேதமடைந்துள்ள போதும் சாரதி காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.