Home செய்திகள் ஹிஸ்புல்லாவை நீக்க வலியுறுத்தி கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு:

ஹிஸ்புல்லாவை நீக்க வலியுறுத்தி கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு:

180
0

கிழக்கு மாகாபண ஆளுநர் ஹிஸ்புல்லாவை நீக்கி விட்டு, கிழக்கு மாகாணத்திற்கு மக்களை நேசிக்கும் ஒரு ஆளுநரை நியமிக்குமாறு கோரி இன்று (10/05) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு” என்ற பெயரில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் கிழக்கின் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இன முறுகலுக்கும், முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் போல் பார்க்கப்படுவதற்கும் முக்கிய காரணமாக விளங்கும் ஹிஸ்புல்லா தமக்கு தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளது அவ் அமைப்பு.

இதற்கமைவாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் அனைத்து கடமைகள், வியாபார மற்றும் தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.