Home முக்கிய செய்திகள் வடக்கில் 169 வெளிநாட்டு முஸ்லீம்கள்!

வடக்கில் 169 வெளிநாட்டு முஸ்லீம்கள்!

189
0

இலங்கையில் 700 முஸ்லீம் வெளி நாட்டவர்கள் அகதி தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை அரசு அவர்களில் 169 பேரை வடக்கில் தங்க வைக்க ஏற்பாடும் செய்துள்ளது.

நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான முஸ்லீம்கள் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி அந்தஸ்து கோரிய நிலையில், அங்கிருந்து வெளியேற்றி அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைவாக வெளிநாட்டு பிரஜைகள் 700 பேரில் 169 பேரை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வடமாகாணத்திற்குரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க பயிற்சிப் பாடசாலையில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றும் அச்ச நிலை நிலவுவதன் காரணமாக இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அகதி அந்தஸ்த்து கோரி அச்சுறுத்தல் மிக்க இலங்கையில், அதுகும் முஸ்லீம்கள் குடியேறியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், அவசர அவசரமாக அவர்களில் 169 பேரை வடக்கில் தங்க வைத்தமை ஏன் என்ற கேள்வியும், வடக்கின் பாதுகாப்பு தொடர்பான அச்சமும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் நீர்­கொ­ழும்­பில் தற்­போது அங்­கி­லி­யன் திருச் சபை­யின் பாது­காப்­பில் உள்ள அவர்­களை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அங்­கி­லி­யன் திருச் சபையே பொறுப்­பேற்­க­வுள்­ளது என்ற தக­வல்­க­ளும் கிடைத்­துள்­ளன.

அது தொடர்­பில் அந்­தச் திருச்­ச­பை­யின் குரு முதல்­வர் சாமு­வேல் பொன்­னை­யா தெரிவித்தபோது ஏதி­லி­கள் எப்­போது அழைத்­து­வ­ரப்­ப­டப்­போ­கின்­றார்­கள் என்­பது பற்றி இது­வரை எனக்­குத் தெரி­யாது. ஆனால் அவர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தங்க வைப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­கள் தற்­போது இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.அவர்­களை எங்கு தங்க வைப்­பது என்­பது இன்­னும் முடி­வா­க­வில்லை. நாம் ஏதி­லி­க­ளாக மாற்­றப்­பட்ட போது எமக்கு வலித்­தது போன்றே அவர்­க­ளுக்­கும் இருக்­கும் என தெரிவித்தார்.