Home செய்திகள் குடும்ப உறுப்பினர்களை இழந்த 200 குழந்தைகள்: செஞ்சிலுவைச் சங்கம்

குடும்ப உறுப்பினர்களை இழந்த 200 குழந்தைகள்: செஞ்சிலுவைச் சங்கம்

191
0

கடந்தமாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களினால் 200 குழந்தைகள் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இலங்கை செஞ்சிலுவைசங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் குண்டு வெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாகவும் சிலகுடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் வேலைக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளதோடு குடும்பஉறுப்பினர்கள் காயம்அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் உயிர்பிழைத்தவர்கள், நேரில்பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் உளவியல் முதலுதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.