Home முக்கிய செய்திகள் நாட்டின் பாதுகாப்பு கோத்தபாயவின் கைகளில்: சந்தேகங்களை உறுதி செய்த றொபேட் ஓ பிளேக்!

நாட்டின் பாதுகாப்பு கோத்தபாயவின் கைகளில்: சந்தேகங்களை உறுதி செய்த றொபேட் ஓ பிளேக்!

224
0

நாட்டின் பாதுகாப்பு கோத்தபாயவின் கைகளிலேயே உள்ளதாக மறைமுகமாக கூறி கோத்தபாயவிற்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார் சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக்.

இவரிந் இக்கூற்று மூலம், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கோத்தபாயவிற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கி, பின்னின்று அமெரிக்க யுத்தத்தை நடத்தியமை வெளிப்பட்டு இருக்கிறது.

அத்தோடு அண்மையில் இலங்கையை உலுக்கிய ஈஸ்ரர் தினக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா இருக்கும் என்றும், அது கோத்தபாயவை வைத்து இதனை நகர்த்தி இருக்கும் எனவும், நாட்டில் ஆட்சி மாற்றம் செய்து கோத்தபாயவை ஜனாதிபதியாக்கு திட்டமும், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அமெரிக்கா இலங்கைக்குள் நுளையும் திட்டமும் பின்னணியில் இருப்பதாக பல ஊகங்கள் வெளிவந்து இருந்தன.

இந்த நிலையில், சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன் கூற்று மேற்கூறப்பட்ட அத்தனை சந்தேகங்களையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

அவர் கூறியவாது;

“தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, உருவாக்கப்பட்டிருந்த தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்ட குழுவைப் போன்றதொரு குழுவை, சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்டக் குழு சிறிலங்காவில் இருப்பது நாட்டுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

உண்மையில், போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச இருந்த போது, சிறிலங்காவில் அத்தகைய குழுவொன்றை வைத்திருந்தார்.

அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார். நாட்டில் உள்ள எல்லா புலனாய்வு கிளைகளினதும், தகவல்களை பகிர்ந்து, அதனை உயர்மட்டங்களுக்கு கொண்டு சென்று இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் அதுபோன்றதொரு குழுவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.