Home தாயக செய்திகள் முடிவிற்கு வந்தது விகாரை விவகாரம் – பிள்ளையார் ஆலயத்திற்கும், வழிபாட்டிற்கும் நீதிமன்றம் அனுமதி!

முடிவிற்கு வந்தது விகாரை விவகாரம் – பிள்ளையார் ஆலயத்திற்கும், வழிபாட்டிற்கும் நீதிமன்றம் அனுமதி!

163
0

முல்லைத்தீவு பழையசெம்மலையில், அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைத்துள்ளமை தொடர்பான வழக்கின் தீர்ப்பே இன்று வெளீயாகியுள்ளது.

மேலும் வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதனை உறுதிசெய்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி காவல்துறையினருக்கு கட்டளையிட்டுள்ளார்.