Home தாயக செய்திகள் தெல்லிப்பளையில் – நகை, பணம் கொள்ளை, வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

தெல்லிப்பளையில் – நகை, பணம் கொள்ளை, வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

161
0

தெல்லிப்பளைப் பகுதில் வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் தெல்லிப்பளை மாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற வயோதிபப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் சடலமாகக் காணப்பட்டார் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தெல்லிப்பளையில், வீட்டில் தனித்திருந்த குறித்த பெண்ணின் கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப் பட்டுள்ளதாக உறவினர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.