Home செய்திகள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

155
0

வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான சதீஸ்குமார் நவநீதமலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 07/05/2019 அதிகாலை வவுனியா, ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து வீட்டின் முன் இருந்த உயரம் குறைந்த மரத்தில் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமையால், கொலை செய்த பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பியதாகவும், இன்று அதிகாலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இதில் ஏதோ மர்மம் அடங்கியிருப்பதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.