Home செய்திகள் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை!

இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை!

145
0

இராணுவ சீருடையைப் பிரதிபலிக்கும்  ஒத்த வடிவங்களில் அமைந்த ஆடைகளையோ துணிகளையோ விற்பனை செய்ய வேண்டாம் என ஆடை விற்பனையாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய ஏற்கெனவே தங்களால் விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையிருப்பின் மீதமுள்ள அளவின் விவரங்களைப் பொலிஸார் கோரி அதுதொடர்பான விவரம் சேகரிக்கும் படிவங்களையும் புடவைக் கடை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுபதற்கு முன்னர் புடவை விற்பனையில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதிருந்ததால் தாங்கள் இவற்றை விற்பனைக்காக கொள்வனவு செய்திருந்ததாககத் தெரிவிக்கும் புடைவைக் கடை வர்த்தகர்கள், தற்போதைய நெருக்கடி நிலைமை தங்களுக்கு பாரிய வர்த்தக இழப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.