
பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மின் பிறப்பாக்கி ஒன்று வெடித்ததில் அருகில் இருந்த வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், 3 பேர் தீக்காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமான , அப்பகுதி முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மிந் பிறப்பாக்கி குண்டுவைத்து தகர்க்கப்பட்டதா…? அல்லது அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இத் விபத்து ஏற்பட்டதா என இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.