
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ரைட் ஹொன் பென் வாலஸ் தலைமையிலான குழு இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சாந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும், அச்சுறுத்தல் சவால்களுக்கு எவ்வாறு முகமளிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்பு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வேண்டிய நேரத்தில் தங்களது நாட்டின் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
