Home செய்திகள் நீர்கொழும்பில் இனக்கலவரம் – வாகனங்கள் தீக்கிரை! வீடுகள், கடைகள் சேதம்!!

நீர்கொழும்பில் இனக்கலவரம் – வாகனங்கள் தீக்கிரை! வீடுகள், கடைகள் சேதம்!!

250
0

நீர்கொழும்பு – பலகத்துறை பகுதியில் இனமோதல் காரணமாக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கடைகள், வீடுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனால் நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7:00 மணிக்கு தளர்த்தப்பட்ட போதும் தொடர்ந்து அப்பகுதியில் பதட்ட நிலைமையே நிலவுகிறது.

மும் மதத்தையும் சேற்ந்த தமிழர்கள் செறிவாக வாழும் நீர்கொழும்பு பகுதியில் முஸ்லீம் மக்களை இலக்குவைத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் ஏனைய சைவ மற்றும் கிறீஸ்த்தவ மதங்களைச் சார்ந்த தமிழர்களையும், முஸ்லீம் மதத்தைச் சார்ந்த தமிழர்களையும் இனமுறுகலுக்குள் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாக இக் கலவரம் அமைந்துள்ளது.

இருப்பினும், இம் முறை தம் மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களை கொளுத்தி, வீடுகள், கடைகளை சேதப்படுத்தியது பெளத்த சிங்களவர்கள் என முஸ்லீம் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். அத்தோடு திட்டமிட்ட வகையில் வீணாண தகராறை ஏற்படுத்தி வாய்த்தர்க்கம் கலவரத்தில் முடிந்தது போல் நடாத்தியும் முடித்துள்ளனர்.

அது தவிர கலவர இடத்திற்கு காவல்துறையினர் உட்பட, படையினர் குவிக்கப்பட்ட பின்னரும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஊறடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னரும் முஸ்லீம் மக்களின் வீடுகள் மீது கல்லெறியப்பட்டமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

முஸ்லீம் மக்களின் ரமழான் நாளை மறு தினம் ஆரம்பமாக உள்ள நிலையில் இக் கலவரம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.