Home தாயக செய்திகள் யாழ் – சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்கு வெடிகுண்டு எச்சரிக்கை!

யாழ் – சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்கு வெடிகுண்டு எச்சரிக்கை!

187
0

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள எச்சரிக்கைக் கடிதம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.

கல்லூரியின் முகவரியிட்டு அதிபரின் பெயருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்த அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் பதற்ற நிலையை அதிகரித்துள்ள அதேவேளையில், பொலிஸார் அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இவை எல்லாம் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுவதாகவும், வடக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைக்கவும், சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், இராணுவ நிலைகளை தொடர்ந்து வைத்திருப்பதற்கானதுமான தந்திரோபாய நடவடிக்கைகளாகவே தெரிகிறது.