Home செய்திகள் கைதான மாணவர்களிடம் மீது நான்கு சட்டத்தின் கீழ் விசாரணை!

கைதான மாணவர்களிடம் மீது நான்கு சட்டத்தின் கீழ் விசாரணை!

190
0

நான்கு சட்டங்களின் கீழ் கைதாகி தடுப்பிலுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

”பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. பல காலமாக அவர்களின் அறையில் இருந்த படங்களையும், ஆவணங்களையும் காரணம் காட்டி மாணவர்கள் கைது செய்யப்பட்டதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜாவும் , நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களுடன் உரையாடி அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் உரையாடி விடுவிக்க கோரியபோது பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தனர். அதன்படி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் மே16 வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு மாணவர்களிற்கும் எதிராக பொலிஸார் நான்கு சட்டங்களின் அடிப்படையில் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர். இதிலொன்று பயங்கரவாத தடைச் சட்டம். இரண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள். மூன்றாவது சிவில் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச பட்டய சட்டம். நான்காவதே 2019 ஏப்ரல் 22 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகள். ஆகிய சட்டங்களை மேற்கோள் காட்டி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய காரணத்தினால் இவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு கிடையாத காரணத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த இரு மாணவர்கள் சார்பிலும் சட்டத்தரணி கே.சயந்தனும் பல்கலைக் கழகம் சார்பில் குருபரன், சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதேநேரம் குறித்த மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த இணக்கத்தை சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடரபில் வடக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலே வடக்கில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியதாக தவறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவரும் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரவில்லை. அப்படியான தவறான கூற்று வந்திருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பல்ல. மாறாக இவ்வாறான கோரிக்கையை விடுத்த ஒரேயொரு நபர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் மட்டுமே ஆகும்.