
இங்கிலாந்தின் முதல் பெண் பாதுகாப்பு செயலாளராக Penny Mordaunt பொறுப்பேற்றுள்ளார்.
இரகசியத் தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கவின் வில்லியம்சனை பதவியில் இருந்து நீக்கிய பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அப் பொறுப்பை Penny Mordaunt இடம் கையளித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த Penny Mordaunt கடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர் என்பதோடு, 2017 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.