Home செய்திகள் இரண்டு நாள் அவகாசம் – காவல்துறையினரின் அவசர அறிவிப்பு!

இரண்டு நாள் அவகாசம் – காவல்துறையினரின் அவசர அறிவிப்பு!

190
0

காவல்துறையினரால் இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டு அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இராணுவ சீருடைகள் அல்லது அதற்கு ஒப்பான ஆடைகள், துணிகள் மற்றும் வாள்கள் உட்பட ஆயுதங்கள் எதுவாக இருந்தாலும் வீடுகளில் இருந்தால் அதனை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்காக இன்றும் நாளையும் (இரண்டு நாட்களுக்குள்) செய்யுமாறும் அதன் பின்னர் வீடுகளில் இருந்து அவ்வாறான பொருட்கள் மீட்கப்பட்டால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய அறிவிப்பானது மக்களை அச்சதில் ஆழ்தியுள்ளதோடு, தமக்கு வேண்டாதவர்களை கைது செய்ய இராணுவமும், காவல்துறையினரும் சேர்ந்து போடும் திட்டம் எனவும், இரண்டு நாட்களின் பின் இவ்வாறான பொருட்களை மீட்டதாகவும், வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையால் தெரிவிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இர