Home செய்திகள் அமைதியான வடக்கில் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – மாணவர்களை உடன் விடுதலை செய்க: சுரேஸ்

அமைதியான வடக்கில் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – மாணவர்களை உடன் விடுதலை செய்க: சுரேஸ்

149
0

அனாவசியமாக பல்கலைக் கழகத்துக்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக் கூடிய நிலைமைகளை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்றும் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்மேலும்தெரிவிக்கையில்.

நாட்டில் இப்போது ஐ.எஸ்..எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாகத்தான் தேடுதல் வேட்டைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அல்லது வடக்கைப் பொறுத்தவரை அவர்கள் பலகாரணங்களைக் கூறி தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இதற்கு பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி பங்கரவாதத்தடைச்சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதாகவும் அரசதரப்பினர்கள் கூறக்கூடும்.

நாங்கள் அரசுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், போராளிகள் தொடர்பாகவோ அல்லது மாவீரர்கள் தொடர்பாகவோ வருடா வருடம் அதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்தநிகழ்வுகளில்வடக்குகிழக்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாது தெற்கிலிருந்தும் சிங்கள புத்திஜீவிகள் கூடகலந்து கொள்கிறார்கள்.

ஆகவே பிரபாகரனின் புகைப்படம் இருப்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. சகல ஊடகங்களிலும் பிரபாகரனின் புகைப்படங்கள் இன்னும் வந்து கொண்டு இருக்கின்றன. சகல அச்சு ஊடகங்களிலும் பிரபாகரனின் புகைப்படம் வருகின்றது.

அவ்வாறான புகைப்படம் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடத்தில் இருக்கக் கூடாதென்பதல்ல. ஆகவே இது உண்மையாகவே ஒரு உள்நோக்கம் கொண்டு மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு முன் முயற்சியாகத்தான் எங்களுக்குப் படுகின்றது.

அநாவசியமாக பல்கலைக் கழகத்திற்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக்கூடிய ஒரு நிலைமையை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து உருவாக்குவது ஆரோக்கியமான விடயமல்ல.

சர்வதேச பயங்கரவாதம் என்று சொன்ன விடயம் முக்கியமானதாக இருக்கின்ற பட்சத்தில் இப்பொழுது தமிழ் இளைஞர்களைபல்கலைக்கழக மாணவர்களைக் கைதுசெய்ய முற்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒருவிடயம்.

ஆகவே புதிய புதிய குழப்பங்களை உருவாக்க அரசோ அல்லது இராணுவமோ, பொலிஸாரோ முயற்சி செய்யக்கூடாது.

வடக்கு மாகாணம் அமைதியாக இருக்கின்றது. அமைதியான இடத்தில் குழப்பத்தை உருவாக்கத் தயவுசெய்து முயற்சிக்கவேண்டாம். ஆகவே உடனடியாக மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தில் சுமூக சூழல் ஏற்படவேண்டும்என்றார்.