Home செய்திகள் 10 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பாடசாலை: கல்வி அமைச்சு

10 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பாடசாலை: கல்வி அமைச்சு

178
0

பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் இரு வாரங்களாக பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தமையால் அக் காலப்பகுதிக்குரிய பாடத்திட்டங்களை முடிக்கும் நோக்கில் 10 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பாடசாலையினை நடாத்த உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இல்லையே அவசரகால நிலமை காரணமாக விடுமுறை விடப்பட்ட இரண்டு வாரங்களையும் எதிர் வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையில் குறைக்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே சனிக்கிழமைகளில் பாடசாலையா…? அல்லது ஓகஸ்ட மாத விடுமுறையில் இரு வாரக் குறைப்பா என்பது தொடர்பான இறுதி முடிவு விரைவில் உத்தியோகபூர்வமாக அறியத் தரப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.