
வவுனியா-சாளம்பைக்குளம் பகுதியில் முஸ்லீம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களூடன் மீட்கப்பட்டுள்ளது.
சாளம்பைக்குளத்தை சேர்ந்த 32 வயதுடைய இம்திகா அஹலம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கழுத்திலும் உடலின் பல பாகங்களிலும் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.