Home செய்திகள் க.பொ.த (சா/த)பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி “மே-24”

க.பொ.த (சா/த)பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி “மே-24”

186
0

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிபர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவலை விடுத்துள்ளார். 

இதேவேளை டிசம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள விஷேட தேவைகள் உடைய விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.