Home முக்கிய செய்திகள் கைதான மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை!

கைதான மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை!

188
0

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இன்று அகைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

இன்ரு காலை முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட தேடுதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் படங்கள் மற்றும் தமிழீழ வரைபடங்கள் மீட்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

குறித்த மாணவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என இராணுவத்தினர் கூறிய நிலையிலேயே அம் மாணவர்களை “பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க” பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது காவல்துறை.

மாவீரர், தியாகிகள், மற்றும் மக்கள் படுகொலை நிகழ்வுகளை எத்தடைகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்து அஞ்சலிகள் செய்துவரும் யாழ் பல்கலைக் கழக மாணவர்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாக இந் நடவடிக்கை அமைந்துள்ளது.

அத்தோடு தேடுதல் எனும் போர்வையில் அதிக படைகள் வீடு வீடாக யாழ்ப்பாணத்தில் செல்வதையும், விசாரணைகள் தேடுதல்களை நடாத்துவதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.