Home செய்திகள் விகாரை புனரமைப்பிற்கு உதவிய புலிகள் – அவர்களிடம் மத வெறி இல்லை:

விகாரை புனரமைப்பிற்கு உதவிய புலிகள் – அவர்களிடம் மத வெறி இல்லை:

336
0

யுத்த காலத்தில் கூட விகாரை புனரமைப்பிற்காக புலிகளை நாடியபோது அதற்கு தடையேது செய்யாது உதவிகளையும் வழங்கியவர்கள் புலிகள். அவர்களிடம் மத வெறி இல்லை.

இவ்வாறு கூறியுள்ளார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர்.

அவர் கூறியதாவது;

நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் மீண்டும் பிரபாகரன் தான் வரவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த முப்பது வருட காலமாக யுத்தத்தை நன்கு அறிந்தவன் நான். அப்போதும் நான் இங்கு தான் இருந்தேன். அப்போது வாகரை, கொக்கட்டிச் சோலை ஆகிய பகுதிகளூக்கு சென்ற வேளை விகாரை புனரமைப்பிற்காக புலிகளிடம் உதவி கோரினேன். என்னை அவர்கள் அச்சுறுத்தவோ ஏன் ஒருவர் கூட விரல் நீட்டிக் கூட பேசியதில்லை. மாறாக அவர்கள் விகாரை புனரமைப்பிற்கு தடையேதும் செய்யாது உதவிகளையும் வழங்கினார்கள். அவர்களிடம் மத வெறி இருக்கவில்லை.

யுத்த காலத்தில் கிழக்கில் இடம்பெயர்ந்த சுமார் 2000 தமிழ், சிங்கள மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கபடவில்லை. அம் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில், மட்டக்களப்பு எல்லைப்பகுதியான புனானையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைக்க ஹிஸ்புல்லாவிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. என்றும் கூறினார்.

ஆனால் இதே தேரர் 2009 இன் பின்னரான காலப்பகுதிகளில் கடும் சிங்கள பெளத்த பேரினவாதியாக, சிங்களக் குடியேற்றங்கள், பெளத்த விகாரைகள் என்பன வடக்கு கிழக்கில் அமைய வலியுறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.