
வடமாகாணத்தில் 34 ஆயிரத்தி பேர் ஒரு அங்குல காணிகூட இல்லாத நிலையில் வாழ்ந்துவருவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மக்களுக்கான காணி உறுதிகளை கொடுக்கும் நடவடிக்கை அடுத்தமாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், மேற்படி விபரத்தை வெளியிட்டுள்ள ஆளூநர் சுரேன்
காணி இல்லாதவர்கள் விதனையாரிடம் சென்று தமக்கு காணி இல்லை என சொல்லவேண்டும். அத்தோடு அவர்கள் சமாதான நீதவானுக்கு முன்னால் “எங்கும் எமக்கு சொந்தமாக காணி இல்லை” என உறுதிமொழி சொல்லவேண்டும். அதன் பின்னர் விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு பொருத்தமான காணி எங்கு உள்ளது என்று பார்த்து அவர்களுக்கு காணி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.