Home செய்திகள் வவுணதீவு சம்பவம் – அஜந்தனை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

வவுணதீவு சம்பவம் – அஜந்தனை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

159
0

வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் கைதான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டையே உலுக்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நடாத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கைதானவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், வவுணதீவில் பொலிசாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் எனத் தெரிய வந்துள்ள நிலையில் குறித்த வழக்கில் கைதான அப்பாவியான அஜந்தனை விடுவிக்க வேண்டும் என பல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்ததை அடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.