
சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
”இந்தக் குழுவையும் இதன் அடிப்படைவாத செயற்பாடுகளையும் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ 2014 லேயே அறிந்திருந்ததோடு, மகிந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான இடம், நிதிம் பயிற்சி என பலவகைகளில் உதவியும் உள்ளமை தெரிய வந்துள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தோடு இதில் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா உட்பட புலனாய்வுத் துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் என கோத்தபாயவிற்கு நெருக்கமான பல இணைந்து செயற்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.