Home உலக செய்திகள் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

202
0

அடக்கி, ஓடுக்கப்பட்டு அடிமைகள் போல் இருந்த தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் தமது உரிமையை வென்றெடுத்த நாளான “மே 1” சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழல் காரணமாக மேதின கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் என எதுவும் இம்முறை நடைபெறவில்லை.

1776 ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும், தமது அடிப்படை உரிமைகளை கேட்டும் அமெரிக்காவின் 13 மாநிலங்களில் வெடித்த தொழிலாளர் புரட்சி 110 ஆண்டுகள் கடந்து 1886 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெற்றி பெற்றது.

307 தொழில் நிறுவனங்களை சேர்ந்த 88,000 தொழிலாளர்களின் கடின உழைப்பாலும், மாபெரும் புரட்சியாலும் தொழிலாளர்களின் உரிமை வென்றெடுக்கப்பட்ட “May 1” நாளையே சர்வதேச தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.