Home செய்திகள் சட்டத்தரணியின் காணியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

சட்டத்தரணியின் காணியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

212
0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் பாவனையற்ற நிலையில் இருந்த காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி காணி சட்டத்தரணி ஒருவரினுடையது என தெரியவந்துள்ளது.

எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 என்பனவே மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.