
புதிய பாதுகாப்பு செயலாளராக இராணுவ ஜெனரல் சாந்த கொட்டேகொட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழர்களால் ஐ.நா வின் மனித உரிமை ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள போர்க்குற்றவாளிகள் பட்டியலிலுள்ள இவர் ஓர் பெளத்த பேரினவாதி என்பதோடு மட்டுமன்றி மிகப்பெரும் தந்திரவாதி எனவும் அறியமுடிகிறது.
இறுதிக்கட்ட யுத்தத்திலும் இவரின் பாரிய பங்கும், ஆலோசனைகளும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிய வருகிறது.
அத்தோடு இவர் சமாதான காலப்பகுதியில் கிழக்குமாகாணத் தளபதி ரமேஸ் அவர்களை சந்தித்து கைவாகு கொடுத்து உரையாடியிருந்தார்.
பின்னர் 2009 இறுதி யுத்த நிறைவின் போது இராணுவத்தினரின் பிடியில் தளபதி ரமேஸ் அவர்கள் இருப்பதும், அவர்கள் விசாரிப்பதும், பின்னர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் முகங்கள் வீங்கி, உடல் முழுவதும் இரத்தங்களோடு விறகு கட்டைகள் மேல் இருந்ததையும், அதே விறகுக் கட்டைகள் அதே இடத்தில் எரிந்த நிலையில் இருந்த புகைப்பட ஆதாரங்களும் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

